உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க., வேட்பாளர் ராஜா பிரசாரம்: அவிநாசியில் பொதுமக்கள் அவதி

தி.மு.க., வேட்பாளர் ராஜா பிரசாரம்: அவிநாசியில் பொதுமக்கள் அவதி

அவிநாசி;அவிநாசியில், தி.மு.க., வேட்பாளர் ராஜா பிரசாரம் மேற்கொண்டபோது, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்தன. பொதுமக்கள் அவதியுற்றனர்.நீலகிரி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜா, திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று பிரசாரத்தை துவக்கினார்.அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ராஜா பேசுகையில், ''நீலகிரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற போதும்,வெற்றி வாய்ப்பு இழந்த போதும், மக்களுக்காக பணியாற்றியுள்ளேன். பணிகளில் குறை இருந்தால் சுட்டிக்காட்டினால், முன்பை விடவும் நேர்மையாகவும், நாணயமாகவும் பணியாற்றுவேன்,'' என்றார்.சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொண்ட பிரசாரம் காரணமாக, வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. பொதுமக்கள் அவதியுற்றனர். பொதுமக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. பட்டாசு வெடிக்கப்பட்டதால், சாலை புகைமண்டலமாக காட்சியளித்தது. ராஜா பிரசாரத்தில் பங்கேற்பதற்காக அழைத்துவரப்பட்டவர்களுக்கு தலா 300 ரூபாய், ஏஜென்ட்கள் மற்றும் கட்சியினரால் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை