உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காந்தி வித்யாலயா பள்ளி பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி

காந்தி வித்யாலயா பள்ளி பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி

திருப்பூர் : திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டியில், தமிழ்நாடு சர்வோதயா சங்கத்தின் கீழ், காந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல் படுகிறது. இப்பள்ளி 10 மற்றும் பிளஸ் 2வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.பிளஸ் 2வில், அஞ்சனா, 579 மதிப்பெண் பெற்றதோடு, பொருளியல், கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியலில் 'சென்டம்' பெற்றுள்ளார். இரண்டாமிடம் மித்ரா, 575 மதிப்பெண், மூன்றாமிடம், கனிஷ்காஸ்ரீ, 567 மதிப்பெண். கவிதா பொருளியலிலும், தர்ஷினி, ஜோஷிகா கணினி பயன்பாடு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தாரணி ஸ்ரீ, 488 மதிப்பெண் பெற்று முதலிடம், கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இரண்டாமிடம், யோகனா, 487 மற்றும் மூன்றாமிடம், தேவிஸ்ரீ 483 மதிப்பெண். தேவிஸ்ரீ, பொன்குமார், சிவநேசன் கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சரவணன், பள்ளி முதல்வர் முத்துக்கண்மணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். பிளஸ் 1 வகுப்பில் 4 பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணுக்கு ஏற்ப, 15 முதல் 100 சதவீதம் வரை கல்விக் கட்டணம் சலுகை வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை