உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதைக்காக வலி நிவாரணி; மேலும் 2 வாலிபர்கள் கைது

போதைக்காக வலி நிவாரணி; மேலும் 2 வாலிபர்கள் கைது

திருப்பூர் : தேனியைச் சேர்ந்தவர் மலைச்சாமி, 26. குடும்பத்துடன் இடுவாயில் தங்கி, அருள்புரத்தில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இவர் வலி நிவாரணி மாத்திரைகளை, போதைக்காக வழங்கி வருவது தெரிய வர, மங்கலம் போலீசார் கண்காணித்து வந்தனர். அவரிடம் சோதனை செய்த போது, 800 வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருப்பது தெரிய வர, போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.பின், அவரை கைது செய்தனர்.தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இதில் தொடர்புடைய இடுவாயை சேர்ந்த தினேஷ் குமார், 24; கவுதம், 26 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 'ஆன் லைன்' வாயிலாக மாத்திரையை வாங்கி, போதைக்காக வழங்கி வருவது, விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்