உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரி மாணவியருக்கு உற்சாக வரவேற்பு

கல்லுாரி மாணவியருக்கு உற்சாக வரவேற்பு

திருப்பூர்: குமரன் மகளிர் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர்.திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியின் 2024-25ம் ஆண்டின் முதலாமாண்டு மாணவியரை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. புதிதாக கல்லுாரியில் சேர்ந்துள்ள மாணவியர்களும், பெற்றோர்களும் திருவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைத்தனர்.கல்லுாரியின் தலைவரும், கோவை வீட்டு வசதி சங்கத்தின் துணை பதிவாளர் அர்த்தநாரீஸ் வரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வசந்தி அனைவரையும் வரவேற்றார். கோவை அரசு தொழில் நுட்ப கல்லுாரி பேராசிரியர் பிரசன்னமூர்த்தி, கல்லுாரியில், கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி மாணவியர் களிடையே பேசினர்.ஊட்டி மாவட்ட பதிவுதுறை பதிவாளர் லட்சுமி பிரியா, கல்வி கற்கும் முறை குறித்தும், போட்டித் தேர்வு களுக்கு எவ்வாறு தயாராவது என்றும் விளக்கமளித்தார். பட்டிமன்றம் மற்றும் மேடை பேச்சாளர் நவீன்குமார் பங்கேற்று மாணவிகள் எவ்வாறு குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும் என்று விளக்கினார். நிகழ்ச்சியில், துறை பேராசிரியர்கள், மாணவியர், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை