உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்பால் மாயமாகும் செக்கான் ஓடை ஆகாயத்தாமரை செடியாலும் பாதிப்பு

ஆக்கிரமிப்பால் மாயமாகும் செக்கான் ஓடை ஆகாயத்தாமரை செடியாலும் பாதிப்பு

உடுமலை:மடத்துக்குளம் அருகே, இயற்கை நீர் வழித்தட ஓடை, ஆக்கிரமிப்புகளாலும், ஆகாய தாமரை செடியாலும் அடையாளத்தை இழந்து வருகிறது.மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளில் இருந்து மழை நீர் மற்றும் அமராவதி பிரதான கால்வாய் மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாய நிலங்களில் கசிவு நீர் சென்று, அமராவதி ஆற்றில் கலக்கும் வகையில், இயற்கை ஓடையாக, செக்கான் ஓடை அமைந்துள்ளது.மழை காலங்களில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் மடத்துக்குளம் - தாராபுரம் ரோட்டில் உள்ள இந்த ஓடையில், ஆண்டு முழுவதும் நீர் இருப்பும் காணப்படும். சுற்றுப்புறத்திலுள்ள பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களிலுள்ள கிணறு, போர்வெல்களுக்கு நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது.இந்த ஓடை குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில், அகலமாக இருந்த ஓடை, இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டும், ஏறத்தாழ, 10 கி.மீ., நீளம் உள்ள இந்த ஓடை பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் மறிக்கப்பட்டு, நீர் வழித்தடம் மாயமாகியுள்ளது.இதனால், மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படுகிறது. மேலும், பல இடங்களில் மறிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் தேங்கி, சாக்கடை கழிவுகள் கலந்தும், ஆகாயதாமரை செடிகள் ஆக்கிரமித்து, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.எனவே, இயற்கை நீர் வழித்தடமாக அமைந்துள்ள செக்கான் ஓடையை முழுமையாக அளவீடு செய்து, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், ஆகாயத்தாமரை செடி மற்றும் புதர் மண்டி காணப்படும் நீர் வழித்தடத்தை துார்வாரி புனரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை