உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பறவை காய்ச்சல் தடுப்பு கூடுதல் இயக்குனர் ஆய்வு

பறவை காய்ச்சல் தடுப்பு கூடுதல் இயக்குனர் ஆய்வு

திருப்பூர் : கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் நவநீத கிருஷ்ணன் நேற்று, திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில், சேமலை கவுண்டம்புதுாரில் அமைக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணையில் ஆய்வு நடத்தினார். பல்லடம் கால்நடை மருத்துவமனையில் நடந்த, கோடை கால கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற கூடுதல் இயக்குனர், கால்நடை விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கினார்.கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கால்நடைத்துறை உதவி இயக்குனர் கவுசல்யாதேவி முன்னிலை வகித்தார்.அதிகாரிகள் பேசுகையில், 'கடந்த மாதம் இறுதியில் இருந்து, ஆடுகளுக்கு, ஆட்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பறவை காய்ச்சலால், கேரளாவில் கோழிகள், முட்டைகள் திருப்பூர் மாவட்டத்துக்குள் கொண்டுவரப்படுவதை தடுக்கும்வகையில், அமராவதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாகன டயர்களில் குளோரின் டை ஆக்சைடு தெளிக்கப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை