உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுத்திகரிப்பு நிலைய பணி நிறைவு

சுத்திகரிப்பு நிலைய பணி நிறைவு

திருப்பூர்;'அம்ரூத்' திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்காக மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையம் பிரிவு மற்றும் ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் கழிவு நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் எஸ்.பெரியபாளையம் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் 3 கோடி லிட்டர் கழிவு நீர்சுத்திகரிப்பு செய்யும் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையம் கட்டுமானப் பணி பெருமளவு நிறைவடைந்து சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாட்டை நேற்று மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை