உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கள்ள நோட்டு கும்பல்; வியாபாரிகள் அச்சம்

கள்ள நோட்டு கும்பல்; வியாபாரிகள் அச்சம்

அவிநாசி:அவிநாசியில் கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி ஆகிய வீதிகளில் விசேஷ நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். துணிக்கடை, பாத்திர கடை, நகைக்கடை, விசேஷங்களுக்கு மளிகை பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கான கடைகள் இப்பகுதியில் உள்ளன.இரு நாள் முன், அவிநாசி - கோவை ரோட்டில் உள்ள பேக்கரி ஒன்றில் டீ, பிஸ்கட் உள்ளிட்ட பலகாரங்களை சாப்பிட்டுவிட்டு 500 ரூபாய் நோட்டை ஒன்றை கொடுத்து நபர் ஒருவர் மாற்றிச் சென்றுள்ளார். அது கள்ள நோட்டு என்பது தெரிந்தது.இதேபோல், உணவகங்கள், பேக்கரிகளுக்கு மளிகைப்பொருள் சப்ளை செய்பவரிடமும், அந்நபர், 500 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை மாற்றிச் சென்றுள்ளார். 500 ரூபாயில் ஒரே எண்கள் இருந்துள்ளது. அசல் நோட்டின் அளவைவிட சற்று மாறுபட்டு இருந்துள்ளது. வணிகர்களை குறி வைத்து கள்ள நோட்டை மற்றும் கும்பல் அவிநாசி பகுதியில் ஊடுருவி உள்ளதாக வணிகர்கள் அச்சமடைந்துள்ளனர். கள்ள நோட்டு மற்றும் கும்பலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கையை அவிநாசி போலீசார் எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை