உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில்ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில்ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

திருப்பூர்: திருப்பூர், அம்மாபாளையம் 'ஸ்மார்ட் மார்டன்' பள்ளியில், மாணவ, மாணவியர் ஆடிப்பெருக்கு கொண்டாடினர்.'ஆடிப்பட்டம் தேடி விதைத்து' என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை விளக்கினர். நீர்நிலைகளுக்கு நன்றி கூறும் நிகழ்வு என்பதையும் சுட்டிக்காட்டினர். பள்ளி மைதானத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆற்றுநீர், மரத்தடியில் விநாயகரை வைத்து வழிபட்டனர். மாணவிகளின் பேச்சு, கிராமிய நடனம் இடம் பெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் ராஜேந்திர பிரசாத், துணை முதல்வர் பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியில் உள்ள அனைவரும் இறைவனை வழிபட்டு, ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிகளை ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை