திருப்பூர்:பிளஸ் 2 தேர்ச்சி முடிவில் கணக்குபதிவியல் தேர்வில் அதிகபட்சமாக, 202 பேர் தேர்ச்சி பெறவில்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ், புவியியல், ஊட்டசத்து உணவியல், விலங்கியல் பாடங்களில் ஒருவர் தேர்ச்சி பெறாததால், இப்பாடங்கள் சென்டம் பெற முடியாமல் போனது. அதிகபட்சமாக கணக்கு பதிவியலில், 202 பேர் தேர்ச்சி பெறவில்லை. தமிழில், 83 பேரும், ஆங்கிலத்தில், 113 பேரும் தேர்ச்சி அடையவில்லை. இயற்பியலில், 93, வேதியியலில், 43, உயிரியியல், 11, தாவரவியல், இரண்டு, கணிதம், 94, வரலாறு, 14, பொருளியியல், 90, வணிகவியல், 83, வணிக கணிதம், எட்டு, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் ஆறு பேர் தேர்ச்சி அடையவில்லை.புள்ளியியல், 658, நுண்ணுயிரியல்,55, உயிர்வேதியியல், 25, நர்சிங் பொது, 87, தொடர்பு ஆங்கிலம், நான்குபேர், மனையியல், 42, அரசியல் அறிவியல், 25, சிறப்பு பாடம், 41 ஆகிய பாடங்களில் தேர்வெழுதிய அனைவரும் முழுமையாக (100 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மொழித்தாள் உட்பட, 17 பாடங்களில் தேர்ச்சி, 99 சதவீதத்தை கடந்தே உள்ளது.அதிகமானோர் தேர்ச்சி பெறாததால், கணக்கு பதிவியல் தேர்ச்சி, 98.14 சதவீதமாக குறைந்து விட்டது. குறிப்பிடத்தக்கது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த முறை எந்த பாடத்திலும் முழுமையான தேர்ச்சி இல்லை. அதே நேரம் இந்த முறை, எட்டு பாடங்கள் முழு தேர்ச்சி கிடைத்துள்ளது. கணக்கு பதிவியலில் கடந்த முறையை விட (154 பேர்) இம்முறை, தேர்ச்சி சதவீதம் சரிந்துள்ளது.எந்த பள்ளியில் தேர்ச்சி சதவீதம் சரிவு என்பது குறித்து விசாரிக்கப்படும். பாட ஆசிரியர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்படும்,' என்றனர்.