திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் திட்ட பணி, நொய்யல் ஆறு மேம்பாடு, பொழுது போக்கு வசதி ஏற்படுத்துதல், முடிவுற்ற திட்ட பணிகளான பூங்கா மேம்பாடு, மழைநீர் வடிகால் பணி, மீன் மார்க்கெட், வாரச்சந்தை, பூ மார்க்கெட் மேம்பாட்டு மற்றும் அம்ரூத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த பணிகள் தற்போதைய நிலை குறித்து, அமைச்சர் சாமிநாதன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர்.பொதுமக்களுக்கான குடிநீர் வினியோக பணிகளை வேகப்படுத்த வேண்டுமென உத்தரவிட்ட அமைச்சர், வளர்ச்சி பணிகளின் நிலை குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினர்.டி.ஆர்.ஓ., ஜெய்பீம், சப் - கலெக்டர் சவுமியா, துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள், ஆர்.டி.ஓ.,க்கள் செந்தில் அரசன், ஜஸ்வந்த் கண்ணன், மாநகராட்சி துணை கமிஷனர்கள் சுந்தரராஜன், சுல்தானா, உதவி கமிஷனர்கள் வினோத், முருகேஷ், செயற்பொறியாளர்கள் கண்ணன், செல்வநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.