உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீஸ் செக்போஸ்டாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு மெஷின் அறை

போலீஸ் செக்போஸ்டாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு மெஷின் அறை

திருப்பூர்;திருப்பூர், சூசையாபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மெஷின் இருந்த அறை, போலீஸ் செக்போஸ்டாக மாறிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பூர், ராயபுரம், சூசையாபுரத்தில் ரேஷன் கடை அருகே கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் சார்பில், 'அம்மா டிரஸ்ட்' நிதி உதவியுடன் தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு மெஷின் கடந்த, 2021ல் ஆண்டு திறக்கப்பட்டது. இது முழுக்க பராமரிப்பு பணிகள் மாநகராட்சி வசம் இருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அந்த சுத்திகரிப்பு முறையாக பராமரிக்கப்படாத காரணமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இச்சூழலில், குடிநீர் சுத்திகரிப்பு மெஷின் இருந்த அறையையொட்டி தற்போது வடக்கு ஸ்டேஷன் போலீஸ் செக்போஸ்ட்டாக மாற்றப்பட்டது. அதில் பொருத்தப்பட்டுள்ள போர்டில் வடக்கு ஸ்டேஷன் என்ற பெயரின் கீழ், அந்த வார்டு கவுன்சிலர் திவாகரன் பெயரை, கட்சி நிறத்தில் பெரிதாக அச்சிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் பலரும் இதுபோன்ற ஆளும்கட்சியின் விதிமீறல்களை, எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க., வினர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்று தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.----படம் வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி