உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மணல் லாரிகள் சிறைப்பிடிப்பு: விவசாய சங்கத்தினர் ஆவேசம்

மணல் லாரிகள் சிறைப்பிடிப்பு: விவசாய சங்கத்தினர் ஆவேசம்

பொங்கலுார்;மண், மணல், எம்சாண்ட் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அவற்றை தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், பல வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.இதனால், வாகனத்திற்கு பின்னால் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக டூவீலர் ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் மாலை, பொங்கலுார் - அவிநாசிபாளையம் அருகே, பாதுகாப்பற்ற முறையில் எம்-சாண்ட் ஏற்றிச் சென்ற லாரியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சிறை பிடித்து அவிநாசிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.உரிய பாதுகாப்புடன் செல்லுமாறு, போலீசார் எச்சரித்து லாரியை அனுப்பினர். விவசாயிகள் கூறுகையில், 'மண், மணல் ஏற்றி செல்லும் லாரிகள், பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை