மேலும் செய்திகள்
மலம்புழா அணைக்கு மாணவர்கள் கல்வி சுற்றுலா
2 hour(s) ago
ஒழுக்கம் விழுப்பம் தரும்; மாணவர்களுக்கு அறிவுரை
3 hour(s) ago
உடுமலை;உடுமலை தேவனுார்புதுார், ஆண்டியூர், உடுக்கம்பாளையம், எரிசனம்பட்டிசுற்றுப்பகுதிகளில், மானாவாரியாகவும், பி.ஏ.பி., பாசனத்துக்கும், நிலக்கடலை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.காட்டுப்பன்றிகள் தொடர்ந்து, சாகுபடியில், சேதம் ஏற்படுத்தியதால், இச்சாகுபடியை மேற்கொள்ள, அப்பகுதி விவசாயிகள் தயக்கம் காட்ட துவங்கினர்.அதே போல், நிலத்தடி நீர்மட்டம் சரிவால், கிணற்றுப்பாசனத்துக்கும், குறைந்தளவே நிலக்கடலை சாகுபடியாகி வந்தது. தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாத நிலை தொடர்கதையானது.நடப்பாண்டு, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து குறித்த நேரத்தில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில், நான்கு சுற்றுகள் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், விதைப்புக்கு முன்பாகவே மழையும் பெய்துள்ளது. எனவே, நடப்பு சீசனில், நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.எண்ணெய் உற்பத்திக்கு நிலக்கடலை தேவை அதிகமுள்ளதால், விலையும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
2 hour(s) ago
3 hour(s) ago