உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உடுமலை: உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.இப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் பூரணி முன்னிலை வகித்தார்.மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர் நடராஜன், விஜயகுமார், நளினி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து பல்வேறு தகவல்களை அளித்தனர். பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்நிகழ்ச்சி நடந்தது.மேல்நிலையில் கலைப்பிரிவு மற்றும் அறிவியல் பிரிவு தேர்வு செய்யும் மாணவர்களுக்கு அதற்கேற்ப உயர்கல்வி தேர்வு செய்வது, அதற்கான உதவித்தொகை பெறுவது குறித்து கருத்தாளர்கள் விளக்கமளித்தனர்.தொடர்ந்து மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்தனர். தமிழாசிரியர் சேஷநாராயணன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ