உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் சிறப்பு ஆலோசனை வகுப்பு

உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் சிறப்பு ஆலோசனை வகுப்பு

உடுமலை : அரசுப்பள்ளிகளில், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டு நாட்கள் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டத்தில், ஆன்லைன் வாயிலாக, சிறப்பு ஆலோசனை வகுப்பு துவங்கியது.மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் செயல்படுகிறது.இத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், மாணவர்கள் உயர்கல்வி சேரும் வரை, முழுமையான கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மறுதேர்வு எழுதுவதற்கும், தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கும், உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தற்போது மேல்நிலை வகுப்புகளும் ஆன்லைனில் நேற்று துவங்கியது. அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை வகுப்பு இன்றும் நடக்கிறது.மாணவர்கள் பாடப்பிரிவுகளை படிப்பதற்கும், அதன் தொடர்பான உயர்கல்வி, போட்டித்தேர்வுகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை