உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டு தோட்ட காய்கறி விதைகள் தோட்டக்கலைத்துறை விற்பனை

வீட்டு தோட்ட காய்கறி விதைகள் தோட்டக்கலைத்துறை விற்பனை

உடுமலை;வீட்டுத்தோட்ட காய்கறி விதைகள், தோட்டக்கலை அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.வீட்டு தோட்டங்களில் காய்கறி உற்பத்தி செய்வதன் வாயிலாக, இயற்கையான காய்கறிகளாகவும், குறைவான செலவிலும் சத்தான காய்கறிகளை உற்பத்தி செய்யலாம்.மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தோட்டக்கலைத் துறை வாயிலாக காய்கறி விதை ரகங்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.இதில், கீரை, தக்காளி, வெண்டை, கத்திரி, பொரியல் தட்டை ஆகிய ஐந்து விதமான காய்கறி விதைகள், ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.மடத்துக்குளம் வட்டாரத்தை சேர்ந்த காய்கறி விதைகள் தேவைப்படும் பொதுமக்கள், மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம், என தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை