உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு

ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு

திருப்பூர் : திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.பள்ளி முதல்வர் டயானா வரவேற்றார். ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன், தலைமை வகித்தார். பிளாட்டோஸ் அகாடமி தாளாளர் ஹரிகிருஷ்ணன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில், கலைமன்றம் சுற்றுச்சூழல் மன்றம், அறிவியல் மன்றம், ஆங்கில மன்றம் மற்றும் விளையாட்டு மன்றங்களின் தலைவர், துணைத் தலைவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் வித்யாரிஸ்வான் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்