உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு துவக்கம்

அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு துவக்கம்

திருப்பூர்: கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் கூட்-டமைப்பு திருப்பூரில் துவங்கப்பட்டது. கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் பல்-வேறு அரசியல் தொழிற்சங்கங்களின் கீழ் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு திருப்பூரில் ஏற்படுத்தப்-பட்டுள்ளது.இதன் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பூரில் நடந்தது. கொங்கு மண்டல தலைவர் முகமது ரபிக் தலைமை வகித்தார். செயலாளர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 21 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் நல வாரியத்தில் நிலுவையில் உள்ள தொழிலாளர் பதிவுகள், புதுப்பித்தல், ஓய்வூதியம், இயற்கை மரண நிவாரண தொகை உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடி நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்-டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்