உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கருப்பராயசுவாமி கோவில் பொங்கல் விழா கோலாகலம்

கருப்பராயசுவாமி கோவில் பொங்கல் விழா கோலாகலம்

அனுப்பர்பாளையம் : திருப்பூர், அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம்புதுாரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீகன்னிமார் சுவாமி கோவில்களில், பொங்கல் விழா கடந்த, 24ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணி முதல் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு, சுவாமி தரிசனம்செய்தனர். மாலை 4:00 மணிக்கு ஸ்ரீ கருப்பராய சுவாமி, மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில், இன்று மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8:00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொங்கல் விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை