உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வக்கீல்கள் போராட்டம்

வக்கீல்கள் போராட்டம்

திருப்பூர் : மத்திய அரசு குற்றவியல் நடைமுறை சட்டங்களில் சில திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது. இவற்றை திரும்ப பெற வலியுறுத்தி 12ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று, இக்கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட பார் அசோசியேஷன் தலைவர் சுப்ரமணியம் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் பங்கேற்றனர்.முன்னதாக, ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்த காரணத்தால், ஸ்டேஷனின் இருபுறமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி