உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காணவில்லை; மின் கம்பம்

காணவில்லை; மின் கம்பம்

சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:பல்லடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக எரியவில்லை; மின் கம்பத்தையும் காணவில்லை. சார்நிலை கருவூலம், பஸ்ஸ்டாண்ட், நுாலகம் ஆகிய முக்கியமான இடங்களில் கூட தெருவிளக்குகள் எரியவில்லை.இதுதொடர்பாக பல்லடம் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருளில் மூழ்கிகிடக்கும் நெடுஞ்சாலையில் வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. மின் கம்பங்களையும், தெருவிளக்குகளையும் கண்டுபிடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை