உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிப்ட் -டீ கல்லுாரி மே 1ல் விழா கோலம்

நிப்ட் -டீ கல்லுாரி மே 1ல் விழா கோலம்

திருப்பூர்;திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லுாரி 1997 முதல் இயங்கி வருகிறது. இங்கு பயின்ற முன்னாள் மாணவ, மாணவியரை ஒரே நாளில் சந்திக்க வைத்து, நல்ல அனுபவங்களை பெற்று, பகிர்ந்தளிக்க, மே 1ம் தேதி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கலந்துரையாடல், ஆடல், பாடல், இசை நிகழ்ச்சி என, மே தினத்தன்று கல்லுாரி விழாக்கோலம் பூணுகிறது. 'க்ராவிட்டி ஆப் டான்ஸ்' குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன், விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் மாணவர்கள், தங்கள் வருகையை, https://forms.gle/H7r32J8R2d4fFSjPQ8அல்லது www.nifttea.ac.inஎன்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம்.மேலும் விவரங்களுக்கு, 74187 39111, 99443 98567 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி