உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடையாள அட்டை இல்லை கோவில் பூசாரிகள் கவலை

அடையாள அட்டை இல்லை கோவில் பூசாரிகள் கவலை

பல்லடம்: 'கோவில் பூசாரிகளுக்கு, கடந்த ஐந்தாண்டுகளாக அடையாள அட்டை வழங்கப்படவில்லை' என, கோவில் பூசாரிகள் நலச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.அதன் மாநில தலைவர் வாசு கூறியதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், பூசாரி களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோரிக்கையை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.இதன் அடிப்படையில், கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, செயல் அலுவலர்கள் அல்லது தக்கார் நிலையில் உள்ள அதிகாரிகள் மூலம் அடையாள அட்டை வழங்க உத்தரவிடப்பட்டது.உத்தரவிட்டு, ஐந்து ஆண்டுகள் கடந்தும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி