உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நதிநீர் இணைப்பில்லை

நதிநீர் இணைப்பில்லை

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன்:மத்திய பட்ஜெட்டில், நதிகள் தேசிய மயமாக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தது ஏமாற்றம் அளித்தது. தண்ணீருக்காக, அண்டை மாநிலங்களுடன் பல ஆண்டுகளாக சண்டை கட்டி வருகிறோம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு இரண்டும் மடங்கு விலை உயர்த்தி தரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, விவசாயிகளின் தேவைகள் எதையுமே நிறைவேற்றப்படாத பட்ஜெட்டாக இது உள்ளது. பயனில்லாத பட்ஜெட்உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து: நீர் பாசன திட்டங்களுக்கான அறிவிப்பு, நலிவடைந்த விவசாயிகளை காப்பாற்றுவதற்காக கடன் நிவாரணம் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதேபோல், நீண்ட நாள் கோரிக்கையான விளை பொருட்களுக்கு விலை கிடைக்கச் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்த்தோம். ஆனால், எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. எனவே, இது விவசாயிகளுக்கு பயனில்லாத பட்ஜெட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை