உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சான்று பெறாத கிளினிக் சீல் வைத்த அதிகாரிகள்

சான்று பெறாத கிளினிக் சீல் வைத்த அதிகாரிகள்

பல்லடம்;பல்லடம் அருகே காரணம்பேட்டை, கே.என்.புரம், பருவாய் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கே.என்.புரம் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தாரணி மெடிக்கல்ஸ், காரணம்பேட்டை விக்ரம் மெடிக்கல்ஸ் மற்றும் மரியா மெடிக்கல்ஸ் ஆகியவற்றில், தற்போது பணி புரியும் மருத்துவரின் பெயரை தமிழ்நாடு மருத்துவ நிர்வாகவியல் சட்டத்தின்படி பதிவு செய்யாமல், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் பெயரில் செயல்பட்டு வந்தது.இதேபோல், காரணம்பேட்டை பருவாய் ரோட்டில் உள்ள மேஷியா மெடிக்கல்ஸ் மற்றும் கிளினிக், முறையாக அனுமதி பெறாமலும், இங்குள்ள மருத்துவர் மோனிஷா என்பவர் கடந்த ஓராண்டாக வருவதில்லை என்பதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, மேஷியா மெடிக்கல்ஸ் மற்றும் கிளினிக்கிற்கு சுகாதாரத் துறையினர் 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை