உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடரும் மரக்கொலைகள்; பசுமை ஆர்வலர்கள் கொதிப்பு

தொடரும் மரக்கொலைகள்; பசுமை ஆர்வலர்கள் கொதிப்பு

திருப்பூர்:திருப்பூரில் நிழலுக்காக வளர்க்கப்படும் மரங்கள் வெட்டப்படுவதும், ஆசிட் ஊற்றி அழிக்கப்படும் செயல்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.கொளுத்தும் கோடை வெயில், நிழலின் அருமையை உணரச் செய்திருக்கிறது. வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் நகர மற்றும் ஊரக பகுதிகளில் நல்ல நிலையில் வளர்ந்து நிற்கும் மரங்களை வெட்டும் செயலில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.நன்கு வளர்ந்த மரக்கிளைகள் வீடுகளுக்கு இடையூறாக இருக்கிறது; மரக்கிளைகள், மின் கம்பிகளில் உரசுகிறது என்பது போன்ற பல காரணங்களை, மரங்களை வெட்டுவோர் முன்வைக்கின்றனர்.பசுமை ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், 'மரங்களை வெட்டுவது, ஆசிட் ஊற்றி அழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வது, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பொறுப்பு. இத்தகைய புகார்களை உதாசீனப்படுத்தாமல், விவகாரத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அதற்கேற்ப மாற்று நடவடிக்கையை உள்ளாட்சி நிர்வாகங்கள் தான் எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை