உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெருமாள் - ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக 8ம் ஆண்டு விழா

பெருமாள் - ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக 8ம் ஆண்டு விழா

அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின், உபகோவிலான ஸ்ரீ பூமி நீளாநாயகி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள், ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவில்களில் எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா கொண்டாடப்பட்டது.முன்னதாக அதிகாலை ஸ்ரீ கரிவராஜப் பெருமாள் கோவிலில் சிறப்பு ஹோமங்கள், கலச புறப்பாடு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு ஹோமம், கலச புறப்பாடு, தீபாராதனை, நடைபெற்றது. இதில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித் தனர். எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவையினர் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை