உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷனில் தேங்காய் எண்ணெய் விவசாய சங்கத்தினர் மனு

ரேஷனில் தேங்காய் எண்ணெய் விவசாய சங்கத்தினர் மனு

உடுமலை;ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, கிராம சபையில், தீர்மானமாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு கொடுத்தனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சியால், தொடர் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.எனவே, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகித்தால், தேங்காய்க்கு நிலையான விலை கிடைக்கும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த கோரிக்கை குறித்து, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ஆர்.வேலுார் உள்ளிட்ட ஊராட்சிகளில் நேற்று மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ