உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

தொழிலாளி கைது

காங்கயத்தை சேர்ந்தவர் சாமிகண்ணு, 45; ஆயில் மில்லில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பருடன், அருகில் உள்ள கோவில் வளாகத்தில் நண்பருடன் துாங்கி கொண்டிருந்தார். அங்கு வந்த வயக்காட்டு புதுாரை சேர்ந்த பிச்சைமுத்து, 58 என்பவர், சாமிகண்ணுவிடம் மது அருந்த பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுக்கவே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிச்சைமுத்து மதுபாட்டிலால் சாமிகண்ணுவை குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், பிச்சைமுத்துவை காங்கயம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை