உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் குமரனுடன் இணைந்து போராடிய பொங்காளி முதலியார்

திருப்பூர் குமரனுடன் இணைந்து போராடிய பொங்காளி முதலியார்

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி பொங்காளி முதலியார் குறித்து அவரது பேரன் நந்தகுமார் கூறியதாவது:பொங்காளி முதலியார் தேசப்பற்று மிக்கவராக வாழ்ந்தார் என, என் தந்தை சொல்லி கேட்டிருக்கிறேன். ஆங்கிலேயருக்கு எதிரான வெள்ளையனே வெளியேறு என, பல போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். திருப்பூர் குமரனுடன் இணைந்து சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தில் பங்கேற்று, போலீசாரால் தாக்கப்பட்டு, மயங்கி விழுந்திருக்கிறார்.மயங்கிய நிலையில் சாலையோரம் அவரை கிடத்தி விட்டுச் சென்றுள்ளனர். அவர் உயிர் பிழைத்துள்ளார். முதல்வராக பக்தவச்சலம் இருந்த போது, 'சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று ஒரு நாள் சிறை சென்றிருந்தாலும், அவர்களுக்கு பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளை வழங்குங்கள்' என, பொங்காளி முதலியார் வலியுறுத்தியுள்ளார்; அதனை அரசும் ஏற்றிருக்கிறது. 68 வயது வரை வாழ்ந்தார்; தன் கடைசி காலங்களில் பனியன் நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை