மேலும் செய்திகள்
மலம்புழா அணைக்கு மாணவர்கள் கல்வி சுற்றுலா
5 hour(s) ago
ஒழுக்கம் விழுப்பம் தரும்; மாணவர்களுக்கு அறிவுரை
5 hour(s) ago
அனுப்பர்பாளையம்;துப்புரவு பணி மோசமாக உள்ளதாக கூறி, மாநகராட்சி கவுன்சிலர் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 30 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் புஷ்பலதா. துப்புரவு பணி சரியில்லாததையும், அதில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தையும் கண்டித்து நேற்று காலை பொதுமக்களுடன் அந்நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் பிச்சை மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் வந்து பேச்சு நடத்தினர். 'வரும் நாட்களில், இதுபோல் நடக்காது,' என உறுதி கூறியதால், கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.கவுன்சிலர் புஷ்பலதா கூறியதாவது: எனது வார்டுக்கு குப்பை எடுக்க, 34 பேர் வேண்டும். ஆனால், 25 பேர் மட்டுமே வருகின்றனர். இதனால் சுகாதார பணி மந்த நிலையில் உள்ளது. ஒரு இடத்தில் சுகாதார பணி குறித்து கூறினால், தனியார் நிறுவன அதிகாரிகள் நம்மை மதிப்பதில்லை. இதனால், பொதுமக்களிடம் கவுன்சிலருக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago
5 hour(s) ago