உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம்

திருப்பூர்:திருப்பூர், பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில், தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம், சக்ஷம் அமைப்பு சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.சக் ஷம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்ச்செல்வன், தம்பி நண்பர்கள் நற்பணி மன்ற தலைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.அளவீடு செய்த, 18 மாற்றுத்திறனாளிகளுக்கு, சேவாபாரதி மாவட்ட தலைவர் பிரேம் குமார் சிக்கா, செயற்கை அவயங்களை வழங்கினார். திருப்பூர் ஐ பவுண்டேஷன் குழுவினர், கண் பரிசோதனை செய்தனர்; 'மெட்ெஹல்ப்' மருத்துவர்கள், இலவச காதொலி பரிசோதனை நடந்தது. துளசி பார்மஸியுடன் இணைந்து, 52 நபர்களுக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ேஹாமியோ மருத்துவர்கள், நியூரோ தெரபி சிகிச்சை அளித்தனர்.இந்திய மருத்துவர்கள் சங்க ரோட்டரி ரத்த வங்கி சார்பில் நடந்த முகாமில், 33 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி