உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊரக வளர்ச்சி ஆபீசில் ரூ.1.02 லட்சம் பறிமுதல்

ஊரக வளர்ச்சி ஆபீசில் ரூ.1.02 லட்சம் பறிமுதல்

திருப்பூர்:திருப்பூர், கோர்ட் வீதியில் ஊரக வளர்ச்சி துறை முகமை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, ஊராட்சிகளில் நடந்து முடிந்த வளர்ச்சி பணிகளுக்கு 'பில்'களை அனுமதிக்க, ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவு, 7:00 மணிக்கு, அந்த அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கத்திடம் இருந்து, 86,000 ரூபாய், உதவி பொறியாளர் சிவராஜிடம் இருந்து, 16,300 ரூபாய், கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை