உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புகையிலை பொருள் விற்பனை; 26 கடைக்கு அபராதம்

புகையிலை பொருள் விற்பனை; 26 கடைக்கு அபராதம்

திருப்பூர் : திருப்பூரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 26 கடைகள் பூட்டப்பட்டு, 7.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பூட்டப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அருகிலுள்ள மளிகை, பேக்கரி, பெட்டிக்கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது.அவ்வகையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள், கடந்த, 25 ம் முதல் 29ம் தேதி வரையிலான, ஐந்து நாள் நடத்திய ஆய்வில், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 26 கடைகள் சிக்கின. அந்த கடைகளுக்கு, மொத்தம் 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இரண்டாவது முறையாக புகையிலை பொருள் விற்பனை செய்த தென்னம்பாளையம் மாகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள பெட்டிக்கடை, ஸ்ரீநகரில் தவசி பேக்கரி, காரணம்பேட்டையில் பழனிமுருகன் மளிகை கடை ஆகிய மூன்று கடைகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி