உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிக்கண்ணா கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு  

சிக்கண்ணா கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு  

திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்புக்கு மொத்தம், 808 இடங்கள் உள்ளன. கடந்த ஒரு மாதமாக ஆன்லைன் மூலம் பலரும் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்தனர்; சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். கவுன்சிலிங் பொறுப்பு பேராசிரியர் குழுவினர் மாணவ, மாணவியர்களுக்கு கவுன்சிலிங் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கி, சான்றிதழ்களை சரிபார்த்தனர். சிறப்பு ஒதுக்கீட்டுக்கு மொத்தம், 612 பேர் விண்ணப்பித்திருந்தனர்.சான்றிதழ் உண்மைத்தன்மை அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பத்து பேர், விளையாட்டு பிரிவில், 24 பேர், தேசிய மாணவர் படைப்பிரிவில் ஒருவர் என மொத்தம், 35 பேர் தேர்வாகினர். அடுத்த கட்ட பொது கவுன்சிலிங் ஜூன் 10ம் தேதி நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை