உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிந்திய ஆயில் ; வழுக்கிய வாகனங்கள்

சிந்திய ஆயில் ; வழுக்கிய வாகனங்கள்

திருப்பூர்;திருப்பூர் புஷ்பா சந்திப்பிலிருந்து ரயில்வே மேம்பாலம் நோக்கிச் செல்லும் ரோட்டில், கூட்டுறவு பண்டக சாலை வளாகத்தை ஒட்டி வளைவான பகுதி அமைந்துள்ளது.நேற்று காலை 9:00 மணியளவில் அந்த வழியாகச் சென்ற ஏதோ ஒரு வாகனத்திலிருந்து ஆயில் சிந்தியுள்ளது. ஆயில் வளைவான ரோட்டில் சிந்திச் சிதறி ரோட்டில் மையப்பகுதியில் பரவியது.சில நிமிட இடைவெளியில் அவ்வழியாக வந்த வாகன டயர்களில் பரவி நீண்ட துாரம் வரை இந்த ஆயில் பரவியது. அந்த வழியாக வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் அடுத்தடுத்து வாகனத்துடன் வழுக்கி விழுந்தனர்.போக்குவரத்து மற்றும் ரோந்து போலீசார் ரோட்டின் மையப்பகுதியில் வாகனங்கள் செல்லாமல் தடுத்து, திருப்பி விட்டனர். ஆயில் பரவிக்கிடந்த பகுதியில் மண் கொண்டு வந்து பரப்பி விடப்பட்டது. கவனத்துடன் வாகனங்களில் செல்ல வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை