உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மில் உரிமையாளர் மூக்கு உடைப்பு; போதை வாலிபருக்கு சிறப்பு கவனிப்பு

மில் உரிமையாளர் மூக்கு உடைப்பு; போதை வாலிபருக்கு சிறப்பு கவனிப்பு

பல்லடம் : குடிபோதையில் பைக் ஓட்டி வந்து, மில் உரிமையாளரின் மூக்கை உடைத்த வாலிபர்களை 'சிறப்பாக கவனித்த' பொதுமக்கள், இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பல்லடம், காளிவேலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயகுமார், 55. மில் உரிமையாளர். நேற்று முன் தினம் மாலை, தனது வேனில் வந்த இவர், காளிவேலம்பட்டி பிரிவில் திரும்ப முயன்றார். வேகத்தடை இருந்ததால், வேனை மெதுவாக இயக்கினார்.அதேநேரம், வேகமாக பைக்கில் வந்த இரு வாலிபர்கள், வேன் மீது உரசினர். இதனால், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு வாலிபர், தாக்கியதில் ஜெயக்குமாருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.இதனை பார்த்த அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், வாலிபர்கள் இருவரையும் பிடித்து, 'சிறப்பாக கவனித்து' போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசாரும் உடனே வந்து, 'எதற்காக வாலிபர்களை தாக்கினீர்கள்? எங்களிடம் தகவல் தெரிவிக்கலாமே,' என்று கேள்வி எழுப்பினர். இதனை கேட்ட பொதுமக்கள், 'குடிபோதையில் பைக் ஓட்டி, ஜெயக்குமாரை தாக்கியது வாலிபர்களின் தவறு. அவர்களை விசாரிக்காமல் எங்களிடம் கேள்வி கேட்கிறீர்கள். கள்ளக்கிணறு சம்பவம் போல் நடந்து விட்டால் என்ன செய்வது,' என, ஆவேசமடைந்தனர்.இதனை தொடர்ந்து, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். மூக்கு உடைபட்ட நிலையில், ஜெயக்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை