உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழாய் பொருத்துவதில் சிக்கல்! ஆட்சேபனையால் மக்கள் அதிருப்தி ஆட்சேபனையால் பறிபோகும் வாய்ப்பு

குழாய் பொருத்துவதில் சிக்கல்! ஆட்சேபனையால் மக்கள் அதிருப்தி ஆட்சேபனையால் பறிபோகும் வாய்ப்பு

அவிநாசி, : அவிநாசி ஒன்றியம், கருவலுார் ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க, மேட்டுப்பாளையம் - அவிநாசி நெடுஞ்சாலையோரம் பொது குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.திருப்பூர் மாநகராட்சிக்கான 4வது குடிநீர் திட்டப்பணி துவங்கிய போது, பொது குழாய், அங்கிருந்து அகற்றப்பட்டது. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள, 9 மேல்நிலை தொட்டிகளில், நீர் நிரப்பப்படுகிறது.அதில் நிரம்பும் நீரை, ஊராட்சி மக்களுக்கு வினியோகிக்க கருவலுார் ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டு, ஒவ்வொரு வீதியிலும் பொது குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. இதில், நடுவீதி எனப்படும் மேற்கு ரத வீதியில் குழாய் பதிக்க, கோவில்பாளையம் சாலை பஸ் ஸ்டாப் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.இதுகுறித்து 2வது வார்டு உறுப்பினர் சற்குணம், ஊராட்சி தலைவருக்கு அனுப்பிய மனுவில், 'ஏராளமான வாகனங்கள் செல்வதால், விபத்து அபாயம் உள்ளது. எனவே, அங்கு பொருத்தாமல், பழைய கனரா வங்கி வீதி அல்லது தேவர் திருமண மண்டபம் அருகில் குழாய் பொருத்த வேண்டும். இதுதவிர மாகாளியம்மன் கோவில் எதிரிலும் பொது குழாய் பொருத்த வேண்டும்' என, கூறியிருந்தார்.ஆனால், அந்த இடத்தில் குழாய் பதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், குழாய் பதிப்பு பணியில் இழுபறி நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை