உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

உடுமலை;மடத்துக்குளம் அருகே, சரக்கு வேனும், பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இருவர் பலியாயினர்.மடத்துக்குளம், சோழமாதேவியைச்சேர்ந்த, திருமூர்த்தி, 35, ஒட்டன்சத்திரம், இடும்ப குரும்ப பட்டியைச்சேர்ந்த, செல்லதுரை, 21, ஆகியோர் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள்.இருவரும், உடுமலையிலிருந்து, புதிய நான்கு வழிச்சாலையில், பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கழுகரை மேம்பாலம் மேல் ஒருவழிப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே, ஒட்டன்சத்திரத்திலிருந்து தக்காளி ஏற்றி வந்த சரக்கு வேன் மோதியது.இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர். மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ