உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையில் பாய்கிறதே தண்ணீர்!

சாலையில் பாய்கிறதே தண்ணீர்!

தண்ணீர் வீண்திருப்பூர், காங்கயம் ரோடு, கனரா வங்கி முன்புறம், குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாகிறது.- ரவிசெல்வம், முதலிபாளையம். (படம் உண்டு)கால்வாய் அடைப்புகாங்கயம், பாரதியார் வீதியில் கால்வாயில் குப்பை தேங்கியுள்ளது. கழிவுநீர் செல்ல வழியில்லை,- திவ்யா, பாரதியார் வீதி. (படம் உண்டு)திருமுருகன்பூண்டி, பூண்டி ரிங் ரோடு, நெசவாளர் காலனியில் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன.- மனோகரன், அண்ணா காலனி. (படம் உண்டு)மின்சாரம் வீண்திருப்பூர், நெருப்பெரிச்சல், ஜி.என்., கார்டனில் பகலில் உயர்கோபுர மின்விளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது.- ராஜதுரை, நெருப்பெரிச்சல். (படம் உண்டு)குப்பை தேக்கம்திருப்பூர், அங்கேரிபாளையம், லட்சுமி நகரில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். குப்பை தேக்கத்தால், கால்வாயிலும் அடைப்பு ஏற்படுகிறது.- அன்பு, லட்சுமி நகர். (படம் உண்டு)பணி மந்தம்திருப்பூர், மங்கலம் ரோடு, ஹரோ ராமா ஹரே கிருஷ்ணா நகர் இரண்டாவது வீதியில் குழாய் பதிக்க குழி தோண்டி அப்படியே விடப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்கள் சென்று வர முடியவில்லை.- சிவக்குமார், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நகர். (படம் உண்டு)தண்ணீர் தேக்கம்கணியாம்பூண்டி ஊராட்சி, வி.ஏ.ஓ., அலுவலகம் அருகில் சாலை அருகே குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள் தவறி விழ வாய்ப்புள்ளது. குழியை மூட வேண்டும்.- ரஹீம்அங்குராஜ், கணியாம்பூண்டி. (படம் உண்டு)அனுப்பர்பாளையம் - கணியாம்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள குழியை மூட வேண்டும். வளைவில் உள்ள குழியால் வாகன ஓட்டிகள் விழுந்து விடும் நிலை உள்ளது.- விஜயன் அண்ணாமலை, அனுப்பர்பாளையம். (படம் உண்டு)ரியாக் ஷன்தரைப்பாலம் அமைப்புதிருப்பூர், 18வது வார்டு, செல்வ லட்சுமி நகரில், கால்வாய் மேல் தரைப்பாலம் இல்லாததால், வாகனங்கள் சென்று வர சிரமமாக இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.- சக்திவேல், செல்வ லட்சுமிநகர். (படம் உண்டு)தற்காலிக தீர்வுதிருப்பூர் பலவஞ்சிபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப் நிழற்குடை முன் கழிவுநீர் தேங்கி, பயணிகள் பஸ்சுக்கு காத்திருக்க முடியாத நிலை இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.- மீனாட்சி சுந்தரம், பலவஞ்சிபாளையம் பிரிவு. (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை