| ADDED : ஆக 20, 2024 10:19 PM
உடுமலை : புதுப்பாளையம் கிளை கால்வாயில், இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, பிரதான கால்வாயிலிருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், புதுப்பாளையம் கிளை கால்வாய் வாயிலாக, 7,219 ஏக்கர் வரை பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாய்க்கு திருமூர்த்தி பிரதான கால்வாயில் இருந்து, பூசாரிபட்டி ஷட்டர் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.ஏ.நாகூர் (புதுப்பாளையம்), விருகல்பட்டி, கொங்கல்நகரம், சோமவாரப்பட்டி, கொண்டம்பட்டி உள்ளிட்ட கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் கீழுள்ள நிலங்களுக்கு, ஷிப்ட் அடிப்படையில் பாசன நீர் வழங்கப்படுகிறது.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பூசாரிபட்டி ஷட்டரில் இருந்து புதுப்பாளையம் கிளை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர், பகிர்மான கால்வாய் ஷட்டர்களை திறந்து வைத்தனர்.பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, மக்காச்சோளம் நடவு உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது. புதுப்பாளையம் கிளை கால்வாய், பூசாரிபட்டி ஷட்டரில் இருந்து 40 கி.மீ., தொலைவுக்கு அமைந்துள்ளது.எனவே, கடைமடை பாசன பகுதிகளுக்கும், முழுமையாக தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தண்ணீர் திருட்டை தடுத்து, ஒவ்வொரு சுற்றிலும் நிறைவான பாசனம் வழங்க வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.