உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலைப்பணி விரைவுப்படுத்த மண்டல அலுவலகம் முற்றுகை

சாலைப்பணி விரைவுப்படுத்த மண்டல அலுவலகம் முற்றுகை

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, 16வது வார்டு ஜெ.ஜெ., நகர் பகுதி மக்கள் அடிப்படை வசதி கேட்டு, கவுன்சிலர் தமிழ்ச்செல்வி, தலைமையில் பொதுமக்கள், 2ம் மண்டல அலுவலகம் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து, உதவி செயற்பொறியாளர் ஹரியிடம், பொதுமக்கள் அளித்த மனு விவரம்:திருப்பூர் மாநகராட்சி, 16வது வார்டு ஜெ.ஜெ., நகர் பகுதியில், சாக்கடை கால்வாய் மற்றும் ரோடு போட மாநகராட்சி சார்பில், 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஐந்து மாதத்துக்கு முன் பணி தொடங்கப்பட்டு, இன்று வரை முடிக்கப்படாமல் உள்ளது. ஆமை வேகத்தில் பணி நடந்து வருகிறது.ஜெ.ஜெ., நகர் மூன்று வீதிகளிலும் ரோடுகள் தோண்டப்பட்டு மக்கள் நடக்ககூட முடியாத நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. ரோடு தோண்டப்பட்டபோது, புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அனைத்தும் உடைந்து விட்டது. இதனால், கடந்த ஒரு மாதமாக பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது.இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, உடனடியாக பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்று கொண்ட உதவி செயற்பொறியாளர், 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று உறுதியளித்தால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை