உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் நொய்யல் கரையில் 1008 பொங்கல் கோலாகலம்

திருப்பூர் நொய்யல் கரையில் 1008 பொங்கல் கோலாகலம்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து, ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பில், திருப்பூர் பொங்கல் திருவிழா நடைபெற்றது. அதையொட்டி, நொய்யல் கரையில் வளர்மதி பாலம் முதல் ஈஸ்வரன் கோவில் பாலம் வரையில், அடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு நாதஸ்வர மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, 1,008 அடுப்புகளில் பெண்கள் பானையில் பொங்கல் வைத்தனர். நொய்யல் கரையில் உள்ள கமல விநாயகர் மற்றும் சித்தி விநாயகர் கோவில்களில் பொங்கல் படைத்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.நிகழ்ச்சிக்கு, மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மேலும், எம்.எல்.ஏ., செல்வராஜ், ஜீவநதி நொய்யல் சங்க தலைவர் அகில் ரத்தினசாமி, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, துணை மேயர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை