| ADDED : நவ 16, 2025 12:29 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில், மாவட்ட ஆண்கள் கபடி அணித்தேர்வு, காங்கயம் ரோடு, மாவட்ட கபடி கழக மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கபடி கழக தலைமை புரவலர் சுப்பிரமணியம், துணை மேயர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தனர். மாநில அமெச்சூர் கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் வரவேற்றார். மாவட்ட கபடி கழக சேர்மன் கொங்குமுருகேசன், தலைவர் ரோலக்ஸ் மனோகர், கன்னிமார்ஸ் ஆறுச்சாமி, பிரேமா மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். துணை சேர்மன் முருகானந்தம், துணைத்தலைவர் ராமதாஸ் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாவட்ட நடுவர்குழு சேர்மன் முத்துசாமி ஒருங்கிணைத்தார். வயது வரம்பு இல்லை; 85 கிலோ எடை பிரிவு என்பதால், மாவட்டம் முழுதும் இருந்து, 25 அணிகளை சேர்ந்த, 301 வீரர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்க வந்திருந்தனர். சிறப்பாக, திறமை காட்டிய வீரர்களை கொண்ட மாவட்ட அணிக்கு, 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஒரு வாரம் காலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிக்கும் வீரர், வரும், 28 முதல் 30 வரை, கிருஷ்ணகிரியில் நடக்கும் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில், திருப்பூர் மாவட்டம் சார்பில் பங்கேற்க உள்ளனர்.