உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருப்பூர் மாணவர்கள் 52 பேர் இஸ்ரோவுக்கு கல்வி  சுற்றுலா

 திருப்பூர் மாணவர்கள் 52 பேர் இஸ்ரோவுக்கு கல்வி  சுற்றுலா

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்று, தற்போது பிளஸ்1 படிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவியர், ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆறு அரசு பள்ளிகளில் படிக்கும், மாணவ, மாணவியர் 52 பேர் மற்றும் ஆசிரியர்கள் ஆறு பேர், நேற்று காலை, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து பஸ்ஸில் புறப்பட்டனர். சுற்றுலா பயணத்தை, கலெக்டர் மனிஷ் நாரணவரே, கொடியசைத்து துவக்கிவைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோனியம்மாள், மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து உள்பட கல்வித்துறையினர்உடனிருந்தனர். அம்மாணவர் குழுவினர், இன்று இஸ்ரோவுக்கு சென்று, ராக்கெட் தொழில்நுட்பங்கள், விண்கலம், ராக்கெட் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை பார்வையிடுகின்றனர். இன்று இரவு, சுற்றுலாவை முடித்துக்கொண்டு, திருப்பூர் நோக்கி திரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை