உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனுகிரஹா சர்வதேச பள்ளியில் உணவு திருவிழாவில் அசத்தல்

அனுகிரஹா சர்வதேச பள்ளியில் உணவு திருவிழாவில் அசத்தல்

உடுமலை;உடுமலை அனுகிரஹா சர்வதேச பள்ளியில், 'உணவே மருந்து' என்ற தலைப்பில் உணவு திருவிழா நடந்தது.உடுமலை, தாராபுரம் ரோடு அனுகிரஹா சர்வதேச பள்ளியில், மழலையர் பிரிவு மாணவர்கள், சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பல்வேறு உணவு பண்டங்கள் தயார் செய்து காட்சிப்படுத்தினர்.தொடர்ந்து, சிறுதானிய உணவுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மாணவர்கள் விளக்கமளித்தனர். பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் கண்காட்சியில் பங்கேற்றனர். பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்களுக்கும் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை