உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சட்டசபை உறுதிமொழிக்குழு மருத்துவமனையில் ஆய்வு

சட்டசபை உறுதிமொழிக்குழு மருத்துவமனையில் ஆய்வு

அவிநாசி:அவிநாசியில் இரண்டு இடத்தில், தமிழக சட்டசபை உறுதிமொழி குழுவி னர் நேற்று ஆய்வு செய்தனர்.தமிழக சட்டசபை உறுதிமொழிக்குழுவினர், நேற்று அவிநாசி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட வரும் தாய் சேய் நலப் பிரிவு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர். இதில், குழு தலைவர் வேல்முருகன் கட்டுமான பணிகள் குறித்தும், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் கட்டடத்தின் தரத்தை சோதித்து, கட்டுமான பொருள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை கேட்டறிந்தார்.தொடர்ந்து, சங்கமாங்குளத்தில், மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்தும் குழுவினர் ஆய்வு செய்தனர். திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். முன்னதாக, அவிநாசிக்கு வந்த சட்டசபை உறுதிமொழிக்குழுவினரை, பேரூராட்சி தலைவர் தனலட்சுமி உட்பட பலர் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி