உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கார்த்திகை பிறந்தது விரதம்: துவக்கும் அய்யப்ப பக்தர்கள்

 கார்த்திகை பிறந்தது விரதம்: துவக்கும் அய்யப்ப பக்தர்கள்

திருப்பூர்: கார்த்திகை மாத பிறப்பான இன்று முதல், அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்குகின்றனர். கார்த்திகை மாதம் முதல் நாளில், அய்யப்ப பக்தர்கள், மாலை அணிந்து, மண்டல விரதம் துவங்குகின்றனர். இன்று முதல் விரதம் இருக்கும் பக்தர்கள், இருமுடி கட்டி சபரிமலை சென்று, அய்யப்பனை வழிபட உள்ளனர். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, திருப்பூர் பகுதிகளில் உள்ள கடைகளில், சபரிமலை சீசன் விற்பனை களைகட்டியுள்ளது. பூஜை சாமான்கள் விற்கும் கடைகளில், துளசிமணி மாலை,சந்தனமாலை, அய்யப்ப டாலர், இருமுடி பை, கறுப்பு மற்றும் நீலநிற வேட்டி - துண்டி விற்பனை கடந்த சில நாட்களாக அதிகம் நடந்தது. இன்று குருசாமி முன்னிலையில், சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதம் துவக்க உள்ளனர். இன்று விஷ்ணுபதி புண்ணியகாலம், சங்காபிேஷகம், சோமவார பிரதோஷம் என, மிக சிறப்பு வாய்ந்த நாள் என்பதால், இன்று பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்து இறையருள் பெறலாம் என, சிவாச்சார்யார்கள் தெரிவித்துள்ளனர். -- கார்த்திகை மாதம் இன்று பிறந்தது. இதையொட்டி, மாலை அணிவதற்காக, திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு கடையில் துளசிமணி மாலைகளை நேற்று தேர்வு செய்த பக்தர்கள். விஷ்ணுபதி புண்ணியகாலம் கார்த்திகை முதல் நாளான இன்று, விஷ்ணுபதி புண்ணியகாலம் என்பதால், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடும், திருமஞ்சனமும் நடக்கிறது. வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி 1ம் தேதியில், விஷ்ணுபதி புண்ணியகாலம் வருகிறது; அந்நாட்களில், பெருமாள் கோவில்களில், அதிகாலை துவங்கி, காலை, 10:00 மணி வரை, பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று காலை விஷ்ணு பதி புண்ணியகால சிறப்பு வழிபாடு, பெருமாள் கோவில்களில் நடக்கிறது. கார்த்திகை சங்காபிேஷகம் சிவாலயங்களில், கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமை நாட்களில், சங்காபிேஷக பூஜை நடத்தப்படும். அதன்படி, கார்த்திகை முதல் நாளான இன்று திங்கட்கிழமை என்பதால், இன்று முதல் சோமவார சங்காபிேஷக பூஜை துவங்குகிறது. இன்று மாலை பிரதோஷம் என்பதால், காலை முதல் மதியம் வரை சங்காபிேஷகமும், மாலையில் பிரதோஷ வழிபாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ