| ADDED : பிப் 10, 2024 12:34 AM
திருப்பூர்;வருமான வரி சட்டம், '43 பி' குறித்த கலந்தாய்வு கூட்டம் 'டெக்பா' அலுவலகத்தில் நேற்று நடந்தது.மத்திய அரசு பட்ஜெட்டில், குறு, சிறு நிறுவனங்களை பாதுகாப்பதற்கான சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி, குறு, சிறு நிறுவனங்கள் என பதிவு செய்துள்ள நிறுவனத்தினர், உற்பத்தி மற்றும் சேவை பரிவர்த்தனைக்கான கட்டணத்தை, 45 நாட்களுக்குள் செலுத்தியாக வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை உரிய காலத்தில் செலுத்தாவிட்டால், அவற்றை செலவாக வருமானவரித்துறைக்கு கணக்கு காண்பிக்க இயலாது. மாறாக, லாபமாக கருதி அத்தொகைக்கு வருமான வரி விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த விளக்க கூட்டம் திருப்பூர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர். புதிய வருமானவரிச் சட்ட அறிவிப்பு குறித்து, ஆடிட்டர் பாலாஜி விளக்கி பேசினார்தொழிற்சாலைகள் மின் கட்டண செலவை குறைத்து, மேற்கூரை சோலார் அமைப்பது குறித்தும், அதற்கான திட்ட மானியம் குறித்தும் சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் துணை பொது மேலாளர் லட்சுமி பேசினார். பிரின்டிங் துறையினர், வருமானவரிச் சட்டம் மற்றும் சோலார் அமைப்பு குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.